• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் குண்டு வீசி மன தைரியத்தை குறைத்து விட முடியாது – அண்ணாமலை

ByA.Tamilselvan

Sep 23, 2022

கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
காரைக்குடியில் இருக்கும் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.