• Sun. Dec 1st, 2024

தமிழகத்தில் ராஜபக்சே ஆட்சி
முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் ராஜபக்சே ஆட்சி நடைபெற்று வருவதாகவும் திமுகவிற்கு முடிவு காலம் நெருங்கி விட்டதாகவும் விருதுநகர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி கழகம் சார்பாக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் விஜயகுமாரன் தலைமை வகித்தாா். நகர செயலாளர் முகமது நெய்னார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மச்சராசா முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர் மன்ற தலைவர் சாந்தி மாரியப்பன், ஒன்றிய குழு துணை தலைவர் முத்துலட்சுமி, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் மாரியப்பன், மின்சார பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட கவுன்சிலர் நாகராஜ், டாஸ்மார்க் மாவட்ட தலைவர் மாதவன், மாவட்ட கவுன்சிலர் வேல்ராணிவெங்கடேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், சரவணன், மிக்கேல்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வேலாயுதம், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக இணைச் செயலாளர் கிருஷ்ணம்மாள், ஜோதிராஜ், பேரவை செயலாளர் கணேஷ்குரு, ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார்ராமானுஜம், அம்மா பேரவை சரவணன், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன் வரவேற்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், தலைமைக் கழக பேச்சாளர்கள் கிருபாகரன், மீனாட்சிசுந்தரன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கலாநிதி, மாநில அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

தமிழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அண்ணா திமுக சார்பாக தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக இதே விருதுநகர் தேசபந்து மைதானத்திலே சங்கரலிங்கநாடார் என்ற ஒரு தியாகி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்தார். அதற்கு பின்புதான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று அண்ணா முதலமைச்சர் ஆன பிறகு வைக்கப்பட்டது. அண்ணாவின் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அண்ணாவின் புகைழ எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு தன் குடும்ப நலனுக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அண்ணாவுடைய புகழுக்கு பெருமை சேர்த்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் . அண்ணாவுடைய துணைவியார் அவர்களுக்கு பொருள் உதவி செய்து அந்த குடும்பத்தை வாழவைத்தவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள். புரட்சி தலைவர் எம்ஜிஆரும், புரட்சி தலைவி அம்மாவும் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அண்ணாவின் பெயரால் குறுக்கு வழியில் கட்சியை கைப்பற்றி ஆட்சிக்கு வந்த கருணாநிதி இன்றைக்கு இருக்கின்ற அவரது மகன் ஸ்டாலினோ ஓட்டு போட்ட மக்களைப்பற்றி சிந்திக்காமல் வாக்களித்த தாய்மார்களை பற்றி சிந்திக்காமல் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகின்ற திட்டம், பிறந்த குழந்தைகளுக்கு அம்மா பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் உட்பட எல்லா திட்டங்களையும் நிறுத்திவிட்டனர். முதியோர் உதவிதொகை வழங்கும் திட்டத்தை குறைத்து விட்டனர்.
ஓட்டு போட்ட மக்களை வஞ்சிக்கின்ற அரசாக திமுக அரசு உள்ளது. திமுக அரசு விடிகின்ற அரசாக இல்லை அது விடிய அரசாக இருக்கிறது. இந்த ஆட்சி சீக்கிரம் வீட்டுக்கு போகணும். திமுக ஆட்சியில் யாருக்கு லாபம் இல்லை. திமுக அரசு விடிகின்ற அரசாக இல்லை அது விடிய அரசாக உள்ளது திமுக ஆட்சியில் யாரும் சூட்சமாக இல்லை. யாரும் சுகமாக இல்லை. திமுகவுக்கு ஓட்டு கேட்ட திமுகவினரே இந்த ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்று நினைக்கின்றனர். திமுக ஆட்சியில் யாருக்கும் லாபம் இல்லை. சாதாரண டாஸ்மாக் பார் அந்த பாரைகூட கரூர்காரன் எடுத்து நடத்துராறாங்க. விருதுநகரில் உழைக்கின்ற எந்த திமுகவினருக்கும் பார் கொடுக்கவில்லை. திமுக நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படவில்லை. அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வருமானத்தை தனது வீட்டிற்கு கொண்டு செல்லும் பணியில்தான் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் சூட்சமாக இல்லை திமுக ஆட்சியில் எல்லா விலைவாசியும் உயர்ந்து விட்டது. யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால் சிறையில் தள்ளுகின்றனர். திமுக ஆட்சியில் “இம்” என்றால் வனவாசம் “ஏன்” என்றால் சிறைவாசம் என்ற வகையில்தான் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை வழி நடத்துகின்றார். ஸ்டாலின் வந்த பிறகு ஒரு நாளைக்கு நான்கு தடவை சூட்டிங் நடைபெறுகின்றது. நாட்டில் கஞ்சிக்கு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் விலைவாசி உயர்ந்துவிட்டது. விவசாயத்தின் அனைத்து பொருட்களின் விலையும் கூடிவிட்டது. கொள்முதலுக்கு ஒரு மூடைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர். திமுக ஆட்சியில் எல்லா பொருள்களிலும் கலப்படம் உள்ளது. எல்லா விலைவாசியும் உயர்ந்து விட்டது. பத்து ரூபாய்க்கு விற்பனை செய்த பொருள் இன்று 20 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்பனை செய்த பொருள் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் ரூபாய் சொத்து வரி கட்டியவர்கள் இன்று 2000 ரூபாய் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கழிவுநீர் இணைப்பு வரியை உயர்ந்துவிட்டது. குடிநீர் கட்டணத்தையும் கூட்டிவிட்டனர். மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. ஐந்தாயிரம் மின் கட்டணம் செலுத்தியவர்கள் அடுத்த மாதம் பத்தாயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் எந்த விலைவாசியும் கூட்டப்படவில்லை. எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகால அம்மாவுடைய ஆட்சியில் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். கருவில் இருக்கும் குழந்தை முதல் இறக்கின்ற முதியோர் வரை திட்டங்களை வாரி வாரி கொடுத்தது அண்ணா திமுக ஆட்சி தான். 10 ஆண்டுகள அண்ணா திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது. இன்று தாசில்தாரிடம் பெட்டிசன் கொடுத்தால் அவர்கள் குப்பையில் தூக்கி எறியும் நிலைதான் உள்ளது. திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து விட்டது. தமிழகம் முதல்வர் தாா்பார் ஆட்சி நடத்துகின்றார். அவரால் சுயமாக செயல்படமுடியவில்லை. அவரை சுற்றி பெரும் கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. என்ன நடக்குது என்று முதலமைச்சருக்கு தெரியவில்லை. அண்ணா திமுக ஆட்சியில் 10 சதவிகித எதிர்ப்பு மட்டுமே இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் 90 சதவீதம் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்த்து பேசினால் பிடித்து ஜெயிலில் போடுகின்றனர். ஒரு ராஜபக்ச ஆட்சி போன்று நடக்கின்றது. எல்லாரையும் மிரட்டி பார்க்க முடியுமா. மிரட்டினால் மடிந்து விடுவார்களா, என்ன செய்ய முடியும் உங்களால் எத்தனை நாள் உள்ளே வைக்க முடியும் இதற்காக பயப்பட கூடியவர்கள் அண்ணா திமுக தொண்டர்கள் கிடையாது. மிட்டா மிராசுதாரர்களை பார்த்து ஆலை அதிபர்களை பார்த்து அண்ணா திமுகவை புரட்சித்தலைவர் ஆரம்பிக்கவில்லை. ஒட்டிய வயிரோடு கிழிந்து சட்டையை பார்த்து இந்த கட்சிைய ஆரம்பித்தார். இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது. கருணாநிதியால் கூட அசைக்க முடியாத அண்ணா திமுகவை, ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது. அண்ணா திமுகவிற்கு அழிவு என்பதே கிடையாது. புரட்சி தலைவர் எம்ஜிஆா், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கின்ற வரை இந்த நாட்டுக்காக உழைத்தார். ஏழை மக்களுக்காக உழைத்தனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கோவில் கோயிலாக அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தி மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அவரது வழியில் வந்த எடப்பாடியார் ஆட்சியில் எந்த குறையும் கிடையாது. தமிழகத்தில் 11 மெடிக்கல் கல்லூரியை எடப்பாடியாா் அவர்கள் கொண்டு வந்தார். விருதுநகர் நகராட்சியில் அனைத்து சாலைகளும் அண்ணா திமுக ஆட்சியில் தான் போடப்பட்டது. விருதுநகர் நகராட்சி, அருப்புக்கோட்டை நகராட்சி, சாத்தூர் நகராட்சி என 3 நகராட்சிக்கு மட்டும் 455 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில்தான். நான்தான் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தேன். அந்த பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றது. விருதுநகர் மெடிக்கல் கல்லூரி எடப்பாடியார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை செய்தவன் நான். 50 ஆண்டுகால கனவு விருதுநகர் மெடிக்கல் கல்லூரியை கொண்டு வந்தது அண்ணா திமுக. அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக் கல்லூரியை அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வந்தோம். புதிதாக இரண்டு கல்வி மாவட்டத்தை கொண்டு வந்தோம். இப்படி நாங்கள் செய்த சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். விருதுநகர் எல்லா கிராமசாலைகளும் தார்சாலையாக போடப்பட்டது அண்ணா திமுக ஆட்சியில் தான். இங்குள்ள எம்எல்ஏக்கள் நாட்டின் ஜமீன்தார் போல் நினைத்து இருக்கின்றனர். ஆட்சியும் காட்சியும் மாறும். ஒன்றறை ஆண்டுகள் முடிந்து விட்டது. அதிகபட்சம் இன்னும் ஒரு ஆண்டுகள் தான். உங்களுடைய ஆட்டம் அடுத்து பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று கூறுகின்றனர். அப்படி இருந்தால் நீங்கள் இன்னும் ஒரு பட்ஜெட் மட்டும் தான் போட முடியும். திமுகவினர் அடக்கி வாசிக்க பழகிட வேண்டும். அண்ணா திமுக தொண்டர்களையும் மக்களையும் துன்புறுத்த வேண்டாம். சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் அனைத்து வரியையும் குறைக்க வேண்டும். புதிதாக திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அண்ணா திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு பெயிண்ட் அடித்து இவர்கள் திறந்து வைக்கின்றனர். ஸ்டாலினுடைய ஆட்சி விளம்பர ஆட்சியாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது தலைவர் எம்ஜிஆர் பாடலில் இது உள்ளது. இட்லி. சாம்பார். சட்னி என்று எழுதி கொடுத்தால் வயிறு நிறையாது. அது வெறும் விளம்பரம் மட்டுமே திமுக பண்ணுகின்றது. நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதிகள் கூறியது நீட் தேர்வை ஒழித்து விட்டார்களா. ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்தை நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறினார்கள். ஆனால் எழுதாத பேனாவிற்கு 80 கோடி ஒதுக்கின்றீர்களே. அதற்கு மத்திய அரசிடம் போராடி அனுமதி வாங்குகின்றீர்களே. நீட் தேர்வு விலக்குக்கு அனுமதி வாங்குங்கள். முடியாததை எல்லாம் செய்வோம் என்று கூறினீர்கள். செய்வதற்கு முயற்சி கூட நீங்கள் எடுக்கவில்லை. நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் எடப்பாடியார் அவர்கள். சட்டமன்றத்தில் திமுக தலைவர் புகழ்பாடும் பணிகள்தான் நடைபெற்று வருகின்றது. அண்ணா திமுகைவ வசைபாடும் வேலை தான் நடக்கின்றது. இதுதான் கடைசி வாய்ப்பு என்று திமுகவினர் முடிவு செய்துவிட்டனர். திமுகவிற்கு ஓட்டு போட மக்கள் தயாராக இல்லை. காரணம் எல்லா விலைவாசியும் கூடிவிட்டது. ஆவின் பொருட்களில் இ, பூச்சி, புழுக்கள் நடமாடுகின்றது. எந்த பொருட்களை எடுத்தாலும் கலப்படமாக தான் உள்ளது. யாருக்கும் ஒரு நிர்வாக திறமை கிடையாது. திமுக ஆட்சியில் அவரது நிர்வாகத்தை கவனிக்காமல் அண்ணா திமுகவை அழிக்கும் வேலையில் தான் ஈடுபடுகின்றனர். மக்களுக்கான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செய்யவில்லை. அவர் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் மட்டுமே நினைக்கின்றார். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா என்பதை விருதுநகர் தொகுதி மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் அண்ணா திமுகவிற்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் அமைப்புசாரா ஓட்டுநா் அணிமாவட்ட செயலாளா் சேதுராமன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரவி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் அருணாநாகசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, சிவகாசி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம் (எ)ராஜஅபினேஸ்வரன், சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்ஜிஓ காலனி மாரிமுத்து, விருதுநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், வழக்கறிஞர் ரவி, மகளிர் அணி பொருளாளர் சாந்தி, புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி சேர்ந்த கருப்பசாமி, தகவல் தொழில்நுடய பொருளாளர் மாரீஸ்வரன், சிவகாசி ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன்,விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சரோஜாமாதவன், வடிவுக்கரசிசங்கர், ராஜம்மாள், கருப்பசாமி, நாகரத்தினம் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருதுநகர் நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகசுப்பிரமணி, மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் திருப்பதிராஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் மாரிக்கனி, விருதுநகர் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பாலகிருஷ்ணன், விருதுநகர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினர். கூட்டம் ஏற்பாடுகளை விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *