

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முருகன் தியேட்டர் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். போராட்டத்தை வாழ்த்தி மாவட்ட குழு உறுப்பினர் ஹஜ் முகமது, போர்க்களம் ஆசிரியர் சிவமணி ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி வட்டம் திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சரி செய்து தர வேண்டும் என்றும், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் . முதியோர் , விதவை உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான நிதி உதவி ஆகியவற்றை ஆயிரக்கணக்கானோருக்கு திடீரென பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டதை கண்டித்தும், மீண்டும் அவர்களுக்கு பணம் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. டி.மல்லையா புரத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜசேகரன், ஜெயா ஈஸ்வரன், சீனி முத்து, விஜயகுமார், சின்ன மாரியம்மாள், ஜெயா, ஞானம்மாள், லட்சுமி, சிறுமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
