• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பேரறிஞர்அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

ByKalamegam Viswanathan

Sep 15, 2026

பேரறிஞர்அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு வாடிப்பட்டியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து 54 அடி உயரம் கொடிகம்பத்தில் கொடியேற்றி மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்‌. பி. உதயகுமார் இனிப்புகளை வழங்கினார்.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு , மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஊர்வலமாக சென்று வாடிப்பட்டி உள்ள அவரது திருவுருவுச்சிலைக்கு மாலை அணிவித்து, 54 அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் கழக கொடியினை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி செயலாளர் எஸ். அசோக்குமார் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.

மற்றும் இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் இ. மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, மாவட்ட கழக நிர்வாகிகள் சி.முருகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், வக்கீல் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், மலையாளம், சி.பி.ஆர். மணி, அன்பழகன், ராமசாமி, மகேந்திர பாண்டி, பெருமாள், மாநில நிர்வாகிகள்புளியங்குளம் ராமகிருஷ்ணன், வெற்றிவேல், ராகுல்,
மாவட்ட அணி நிர்வாகிகள் துரைப்பாண்டி, சரவணன்பாண்டி,சிவா, செல்லையா, முத்துராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.