மானாமதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி.. 7 பேர் காயம்..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அதிகாலை கார் நிலைதடுமாறி கவிழ்ந்து இளம் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது இந்த விபத்து சம்பவம் நடைபெற்றது. மானாமதுரை அருகே தெற்குச்சந்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…
கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் உலக மீனவர் தினம்
உலக மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் சிறப்பு வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இதனால் கடற்கரை கிராமங்கள்…
சைல்டுலைன் 1098 சார்பில் கொண்டாடப்பட்ட குழந்தைகள் நண்பன் வார விழா
சிவகங்கை மாவட்டம் சைல்டுலைன் 1098 சார்பில் நவம்பர் 14 முதல் 19 வரை குழந்தைகள் நண்பன் வார விழா கொண்டாடப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக அரளிகோட்டை ஊராட்சியில் சிறப்பு திறந்த வெளி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சைல்டுலைன் உறுப்பினர் மலைக்கண்ணண் வரவேற்று…
திருடர்களை பிடிக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டர் கொலை
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நேற்றிரவு ஆடு திருடர்களை விரட்டிச் சென்று மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே பிடிக்கமுயன்றுள்ளார். அப்போது திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சாம்பவர்வடகரை பேரூர் செயலாளர் மாறன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகசாமி,…
கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்
இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் திடீர் ஆய்வு செய்தார். இளையாங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரம் தட்டுப்பாடு நிலவுவதாக வந்த தகவலை அடுத்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி…
விதவைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்திபுரம் பகுதியைச் சேர்ந்த விதவை பெண் ஒருவருக்கு சமூக ஊடகம் மூலமாக கடந்த சில மாதங்களாக அறிமுகம் இல்லாத இரு மொபைல் எண்களிலிருந்து தொடர்ந்து ஆபாச படங்களையும், ஆபாச வாசகங்களையும் அனுப்பி தொல்லை அளிக்கப்பட்ட வந்ததாக…
விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மதுரை பெரியார் பேருந்து நிலையம்
மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், குன்னத்தூர் சத்திரம், வைகை ஆற்றை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர்…
அம்மா உணவகத்தில் பெயர் பலகையில் கலைஞரின் படம் இடம்பெற்றுள்ளது..
மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் சேர்த்து கலைஞரின் படமும் இடம்பெற்றுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு சென்னையில் சிலர் அம்மா உணவகம் தாக்கப்பட்டு சர்ச்சையான பின்னர், முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்…
அரியவகை ’தோணி ஆமை’ சிக்கியது
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடலில் 4 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட அரியவகை ’தோணி ஆமை’ மீனவர் வலையில் சிக்கியதால் மீண்டும் கடலில் விடப்பட்டது. இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய…




