Smule ஆன்லைன் Singing app பாடகர்கள் ஒன்றிணைந்து நேரடியாக பாடும் நிகழ்ச்சி கச்சேரி குயில்கள் என்கிற பெயரில் கோவையில் 12 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எஸ் பி எஸ் கிரான்ட் இன் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஆண் பெண் பாடகர்கள் கலந்துகொண்டு பாடல்களை பாட இருக்கிறார்கள். மேற்படி நிகழ்ச்சியை பூரணி ஜெயபிரகாஷ் டாக்டர் பிரபு ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.