மாணவ,மாணவிகளை சாதிரீதியாக தாழ்த்தி பேசியும்,பாலியியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்காசி மாவட்ட இந்துபறையர் மாகசபை மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு.
தென்காசி மாவட்ட இந்து பறையர் மகாசபையினர் மாவட்ட கல்வி அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் …எங்கள் சமூகத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் சுமார் 200 பேர் சிவகிரி பாலவிநாகர் பள்ளியில் படித்துவருகின்றனர்.எங்கள் மாணவ- மாணவிகளிடம் இப்பள்ளியில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன் என்ற ஆசிரியர் தொடர்ந்து தவறாக தொடுதல்,இரட்டை அர்த்தத்தில் பேசுதல்,பாலியியல் தொந்தரவு செய்தல், சாதியரீதியாக தாழ்த்திபேசுவது என தொடர்ந்து மாணவ-மாணவிகளை மன உழைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்.இது தொடர்பாக மாணவ-மாணவிகள் எழுதிக்கொடுத்த கடிதம் எங்களிடம் உள்ளது.எனவே மேற்கண்ட நபரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யவும்,துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முன்பு மாணவ- மாணவிகள் பொதுமக்கள்,பொற்றோர் கலந்து கொண்ட போராட்டம நடைபெற்றது.