• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆலங்குடி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா..,

Byமுகமதி

Apr 8, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு என்று அரசு கலைக் கல்லூரி இல்லாமல் இருந்தது. அந்த நிலையை போக்குவதற்கு நீண்ட முயற்சி எடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ. வீ. மெய்யநாதன் ஒரு கல்லூரியை பெற்று தந்து சில காலம் தனியார் கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வந்தது.

தற்போது கல்லூரிக்கான தனியாக இடம் ஒதுக்கப்பட்டு மிகப் பிரமாண்டமான கட்டிடங்களும் கட்டப்பட்டு கீழாத்தூர் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் ஆண்டு விழா, மற்றும் கவின் கலை மன்ற விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜானகி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் வேலு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கியும் வாழ்த்தியும் பேசினார்.

கணிதத் துறைத் தலைவர் அர்ஜுனன் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் ஜானகிதலைமை உரையுடன் ஆண்ட அறிக்கையும் வாசித்தார்.
ஆங்கிலத் துறைத் தலைவர் மணிகண்டன் விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தமிழ்த் துறைப் பேராசிரியர் வனிதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.