• Thu. Apr 18th, 2024

சேலத்தில் பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி பேட்டி

திரௌபதி படத்திற்கு பின்னர் தான் சார் பதிவாளர் அலுவலகங்களில் மூன்றாம் நபர்களை அனுமதிக்க கூடாது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது என்று சேலத்தில் இயக்குனர் மோகன் ஜி பேட்டி…..
சேலத்தில் தனியார் கல்லூரி மாணவிகள் இடையே பகாசூரன் படக்குழு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பகாசூரன் இயக்குனர் மோகன்ஜி பேசுகையில்…
செல்வராகவன், நடராஜன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்கிற்கு வரவுள்ளது. இதற்காக கல்லூரிகளில் மாணவிகள் இடையே செல்போன் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.மேலும் வீடுகளில் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பெற்றோருக்கு தெரியவில்லை. அதில் உள்ள சிக்கல்கள், பிரச்சனைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இந்த திரைப்படத்தில் கூறியுள்ளோம். இதனைத் தொடர்ந்து கோவை, மதுரை, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கூறினார்.


சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு முறையும் தன்னைக் குறித்து வரும் கருத்துக்களுக்கு அமைதியாக இருந்தால் அது உண்மையாகிவிடும் என்பதனால் தொடர்ச்சியாக ஒரு சில கருத்துக்களுக்கு பதில் அளித்து வருகிறேன். திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பெயர் வைப்பதும், காட்சிகளை வைப்பதும் மக்களை கவர்வதற்கு அல்ல. மக்களுக்கு ஒரு விதமான புரிதலை ஏற்படுத்த, மக்களுடன் இணைப்பதற்கும், படம் பெயர் குறித்து பேசு பொருளாக வேண்டும் என்பதற்காக மட்டும்தான், பிரபலமாக்குவதற்கு அல்ல. சிவன் பாடலை திரைப்படத்தில் வைப்பது நிறைவாக உள்ளது. சமுதாயத்தில் என்னை சுற்றி உள்ள விஷயங்களை படம் ஆக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றோர். திரௌபதி படத்திற்கு பின்னர் பதிவாளர் அலுவலகத்தில் மூன்றாம் நபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என்பதையும் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. திரௌபதி படத்தினால் இது நடந்தது என்று நான் கூறவில்லை. ஆனால் திரைப்படம் வெளியான பிறகு சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பகாசூரன் படமும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *