• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 517

குறள் 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல் பொருள் (மு.வ): இந்தத்‌ தொழிலை இக்‌ கருவியால்‌ இன்னவன்‌ முடிப்பான்‌ என்று ஆராய்ந்த பிறகு அத்‌ தொழிலை அவனிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

குறள் 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல் பொருள்(மு.வ): செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின்‌ தன்மையையும்‌ ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்‌.

குறள் 515

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தானென்று ஏவற்பாற் றன்று பொருள் (மு.வ): செய்யும்‌ வழிகளை அறிந்து இடையூறுகளைத்‌ தாங்கிச்‌ செய்து முடிக்க வல்லவனை அல்லாமல்‌, மற்றவனைச்‌ சிறந்தவன்‌ என்று கருதி ஒரு செயலைச்‌ செய்யுமாறு ஏவக்கூடாது.

குறள் 514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர் பொருள் (மு.வ): எவ்வகையால்‌ ஆராய்ந்து தெளிந்த பிறகும்‌ செயலை மேற்கொண்டு செய்யும்போது அச்‌ செயல்வகையால்‌ வேறுபடும்‌ மக்கள்‌ உலகத்தில்‌ உண்டு.

குறள் 513

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு பொருள் (மு.வ): அன்பு, அறிவு, ஐயமில்லாமல்‌ தெளியும்‌ ஆற்றல்‌, அவா இல்லாமை ஆகிய இந்‌ நான்கு பண்புகளையும்‌ நிலையாக உடையவனைத்‌ தெளியலாம்‌.

குறள் 512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை பொருள் (மு.வ): பொருள்‌ வரும்‌ வழிகளைப்‌ பெருகச்‌ செய்து, அவற்றால்‌ வளத்தை உண்டாக்கி, வரும்‌ இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல்‌ செய்யவேண்டும்‌.

குறள் 511:

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். பொருள் (மு.வ): நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

குறள் 509:

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபிதேறுக தேறும் பொருள்.பொருள் (மு.வ):யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

குறள் 508:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

குறள் 508:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.