• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

துளிர் வினாடி வினா போட்டிகள்..,

Byமுகமதி

Sep 8, 2026

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக திருவரங்குளம் வட்டார அளவில் 2026 ஆம் ஆண்டிற்கான துளிர் வினாடி வினா போட்டிகள் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (08.09.2026 -செவ்வாய்) நடைபெற்றது.

வட்டாரத் தலைவர் ஆசிரியர் டிட்டோ அவர்கள் தலைமை வகித்தார் .
வட்டாரச் செயலாளர் ஆசிரியர் தியாகு அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

போட்டியை பள்ளியின் தலைமையாசிரியர் தியாகராஜன் அவர்கள் துவக்கி வைத்தார் .

தாய்த் தமிழ் ராஜா வானவில் மன்ற ஓவியா, சரண்யா ,
ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.

இப் போட்டியில் 25க்கும் மேற்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

6-8 வகுப்புகளுக்கான வினாடி வினா போட்டியில் முதல் பரிசினை கீழாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

9-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் பள்ளத்து விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும் , கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்

11 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர் .

வெற்றி பெற்றவர்களுக்கு ஆலங்குடி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் முத்துவேலு கவிஞர் ராமு ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள்.
உதவித் தலைமை ஆசிரியர் செல்வம் மற்றும் ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியாக அறிவொளி கருப்பையா நன்றியுரை ஆற்றினார்.