• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் வ.உ.சி.பிறந்தநாள் விழா பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வ.உ.சி., ஐ. வி. அறக்கட்டளை சார்பாக வ.உ.சிதம்பரனாரின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் பாபநாசம் தலைமைதாங்கினார். கௌரவ தலைவர் தங்கராஜ்,கூட்ட மைப்பு மாநில தலைவர் வெங்க டாசலம்,தேனி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணிஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் செந்தில் குமார் வரவேற்றார்.இந்த விழாவில்வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி சகிலா கணேசன் முளைப்பாரி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.

இதில் 155 பெண்கள் முளைப்பாரி சுமந்து பழைய நீதிமன்றம், யூனியன் ஆபீஸ் பிரிவு, கிருஷ்ணன் கோயில், காவல் நிலையம்,எல் புதூர் பிரிவு,பேருந்து நிலையம்,லாலா பஜார், சந்தை பாலம் வரை ஊர்வலமாக சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட வ. உ. சி., திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்தக் கூட்டத்தில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன்,தே.மு.தி.க., முன்னாள் பேரூர் செயலாளர் மாரியப்பன், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் பால சரவணன்ஆகியோர் வ. உ. சி., சிறப்புகள் பற்றி பேசினர். இதில் வாடிப்பட்டியில் வ.உ.சி.,க்கு வெங்கல சிலை அமைக்க வேண்டும் என்றும், செப்டம்பர் 5 வழக்கறிஞர் தினமாக அறிவித்து அரசு விடுமுறை விட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த விழாவில் சிவகாசி செல்வி, ராமர்,விளாங்குடி கீதா பழனி பாலாஜி துணைத் தலைவர் முருகேசன், சோனை பாண்டி,கார்த்திக், முருகன் கொத்தனார், மட்டப்பாறை கண்ணன், பாலா, சிலம்பரசி, முத்துலட்சுமி, தீபா, பொன் பாண்டி,காளீஸ்வரி, ஆசைத்தம்பி, முத்துலட்சுமி,ரமேஷ், ஊர்சேரி சதீஷ், அழகாபுரி பாலா, வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் சந்தான பாண்டி நன்றி கூறினார்.