மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் சுந்தரவேல் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் கௌதம், தோட்டக் கலை உதவிஇயக்குநர்கள் தாமரை செல்வி, சரவணன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ராம்குமார், செந்தில்குமார் ,கணேசன், பாசன ஆய்வாளர் முகமது சுல்தான், கால் நடை மருத்துவர் நிவேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜா வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் பெரியாறு பாசன கால்வா யில் இருபோக சாகுபடி நிலங்களில் ஒரு போக சாகுபடிக்கு இம்மாத இறுதிக்குள் தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் பெரியாறு பாசன கால்வாய் சீரமைக்க வேண்டும். அய்யனார் கோயில் கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள பழுதான ஆழ்துளை குழாய்களை பழுதுபார்க்க வேண்டும்.

பருவ மழை தொடங்குவதற்கு முன் கண்மாய், ஏரிகுளங்களை தூர்வாரி கரைகளை உயர்த்தி, வரத்துகால் வாய் தண்ணீர் வெளியேறும் கால்வா ய்களை சீரமைத்து, சீமை கருவேலம் மரங்கள் மற்றும் மரம் செடி கொடிகளை அகற்றி விட வேண்டும்.

பால மேடு சாத்தியாறு அணையை தூர் வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் கொடுத்து விவாதிக்கப்பட்டது. முடிவில் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார்.








