• Tue. Apr 16th, 2024

குஜராத் சட்டசபை தேர்தல் முதல் கட்ட பிரசாரம் ஓய்கிறது

ByA.Tamilselvan

Nov 29, 2022

குஜராத் சட்டசபை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.1ம் தேதி நடக்க உள்ளதால் 89 தொகுதிகளில் முதல்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடந் ஓய்கிறது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது. அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1ம் தேதி, 5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1ம் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *