அதிமுக தொண்டர்களிடம் 3 பிரிவுகளாக இருக்கும் அணிகள் இணைவார்களா என்ற கேள்வி நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அதிமுகவின் தலைமைக் கழகம் என்ற பெயரில் ஓபிஎஸ் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வரும் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி சேப்பாக்கத்தில் இருந்து, மெரினாவில் உள்ள நினைவிடம் வரை ஊர்வலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தியதும், உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.ஒருபக்கம் சசிகலா, இன்னொரு பக்கம் டிடிவி, ஓபிஎஸ் என 3 பேரும் டிசம்பர் 5ம் தேதி சந்திப்பார்களா? ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எற்பட்டுள்ளது