• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

வாழைக்காய் மட்டன் குழம்பு

வாழைக்காய் – 2 தோல் சீவியது
(ஒரு காயில் 4துண்டுகள் வருவது போல் வட்டமாக நறுக்கி கொள்ளவும்)
இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்,
துருவிய தேங்காய்- 3ஸ்பூன்,
கசகசா, பெருஞ்சீரகம்,
முந்திரி-6
வெங்காயம் – 100கிராம் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி
பட்டை, அன்னாசிப்பூ – சிறிதளவு

செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காய், பெருஞ்சீரகம், கசகசா, முந்திரிப்பருப்பு ஆகியவைகளைப் போட்டு கருகி விடாமல் வதக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி, பட்டை, அன்னாசிப்பூ போன்றவைகளை நன்கு வதக்கி பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய்த்தூள்- 1ஸ்பூன், மட்டன் மசாலா-2ஸ்பூன் போட்டு வாழைக்காய் போட்டு தேவையான அளவு உப்பு நீர் விட்டு நன்கு வெந்தப் பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து மசால் வாடை போனதும் இறக்கி விடவும்.