தேவையான பொருட்ளகள்:
உருளைக்கிழங்கு – 2 (அல்லது) 4
சோளமாவு – 2 தேக்கரண்டி
மிளகாய்தூள், கொத்தமல்லித்தூள் – ½ தேக்கரண்டி
கரம் மசாலா – ¼ தேக்கரண்டி, மிளகு – ¼ டீஸ்பூன், சாட் மசாலா – ¼ டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – பெரியது 1, ரொட்டித் தூள்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மேலே கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 2டீஸ்பூன் மைதாமாவுடன், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். இப்போது உருளைக்கிழங்கு கலவையில் சிறிதாக பால் போல் செய்து மைதாகலவையில் பிரட்டி, பின்னர் ரொட்டித் தூளுடன் பிரட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். பின்னர் இத்துடன் லாலிபாப் குச்சிகளை சொருகி வைத்தால், உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி. சூடான சுவையான மாலைநேர சிற்றுண்டி.
உருளைக்கிழங்கு லாலிபாப்:
