வெள்ளை உளுத்தம்பருப்பு- 1கப்,
பச்சரி-2ஸ்பூன்,
பாசிப்பருப்பு-1ஃ2கப்,
ஏலக்காய்- 4 பொடித்தது,
வெல்லம்-1கப் பொடித்தது,
நெய்- 1கப்
வெல்லம் தவிர அனைத்து பொருட்களையும் வாணலியில் பொன் நிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு வெல்லத்தை நீர் விட்டு நன்கு கரைத்து அடுப்பில் வைத்து அதில் மாவை கொட்டி கட்டி விழாமல் நெய் விட்டு அடி பிடிக்காமல் கிண்டி நெய் மேலே மிதக்கும் போது அடுப்பிலிருந்து இறக்கவும், இந்த இனிப்பு செட்டிநாடு விருந்துகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது.