• Fri. Mar 29th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • பகல் 1 மணி நிலவரப்படி 35.34% வாக்குகள் பதிவு..

பகல் 1 மணி நிலவரப்படி 35.34% வாக்குகள் பதிவு..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி35.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர், நாமக்கல் மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக சென்னை மாநகராட்சியில் 23.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டிலேயே சென்னையில்…

1947ல் பிரிந்த குடும்பம் 74 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1947ஆம் ஆண்டு இந்திய பிரிவினையின்போது ஏற்பட்ட குழப்பத்தில் பிரிந்து சென்று, சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் வளாகத்தில், இந்த உணர்வுப்பூர்வ சந்திப்பு…

இலக்கியா தர்மா’ பெண் டி.எஸ்.பி-யா? ட்விட்டர் சர்ச்சை

நெல்லை காவல்துறையில் பெண் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக கூறப்படும் ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.‘இலக்கியா தர்மா’ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் அக்கவுண்ட் திருநெல்வேலியில் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அக்கவுண்ட்…

2 மணிக்கு மேலதான் திமுக-வோட கச்சேரியே ஆரம்பிக்கும்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சென்னையில் தனது வாக்கைப் பதிவுசெய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தி.மு.க-வை…

வாக்களிக்க விரும்பவில்லை: அறப்போர் இயக்க ஜெயராமன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பதிவு செய்தார் தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்,…

இனிமேல் வரும் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் : அன்புமணி ராமதாஸ்

இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பாமக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய…

இந்த முறைதான் தனியாக வந்து வாக்களிக்கிறேன் – சசிகலா உருக்கம்

இந்த முறைதான் தனியாக வந்து வாக்களிக்கிறேன், அதனை நினைத்துக்கொண்டேதான் வந்தேன்” என்று வி.கே.சசிகலா உருக்கமாக கூறியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடியில் வி.கே.சசிகலா வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “வாக்களித்திருக்கிறேன். இந்தமுறைதான் நான் தனியாக வந்து…

நம்பி ஏமாந்தது போதும் …30 ஆண்டுகள் கழித்து முதல் முறை வாக்களித்த நபர்

நடிகர் ரஜினிகாந்துக்காக 30 ஆண்டுகளாக வாக்கு செலுத்தாமல் இருந்துவந்த அவரது ரசிகர் மகேந்திரன் இன்று அவரது முதல் வாக்கை செலுத்தியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என…

ரஜினிகாந்த் ஓட்டு போட வரமாட்டார்.. உண்மை நிலை என்ன ?

எப்போதும் வாக்களிக்க ரஜினிகாந்த் காலையிலேயே வந்துவிடுவார், ஆனால் இதுவரை அவர் வராததால் அவர் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்களிப்பது என்பது ஒவ்வொருவருடைய ஜனநாயக கடமை. பேனா மைக்கு இருக்கும் பவர், ஆற்றலை காட்டிலும், கைவிரலில் வைக்கப்படும் மைக்கு இருக்கிறது என்பார்கள்.…

மதுரையில் ஹிஜாப்பை அகற்ற பாஜக முகவர் வலியுறுத்தியது தொடர்பாக ஆட்சியரிடம் அறிக்கை கேட்பு

மதுரையில் ஹிஜாப்பை அகற்ற பாஜக முகவர் வலியுறுத்தியது தொடர்பாக ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.மதுரை மேலூரில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியதற்கு தேர்தல் அலுவலர்கள், பிற முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல்…