• Fri. Apr 26th, 2024

இனிமேல் வரும் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் : அன்புமணி ராமதாஸ்

இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பாமக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை முதலே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரொட்டிகார தெருவிலுள்ள 20 வது வாக்குசாவடி மையத்தில் எம்.பி., அன்புமணி ராமதாஸ் தனது வாக்கினை பதிவு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 6 ஆண்டுகளுக்கு பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், எப்போதும் இல்லாத அளவிற்கு பண பட்டுவாடா தமிழகம் முழுவதும் நடக்கிறது. இது ஜனநாயக கேளி கூத்து.

தொடர்ந்து பேசிய அவர், ஆளும் கட்சியினர், எதிர் கட்சியினர் பாமக உள்பட பலரையும் மிரட்டி வாபஸ் பெற வைத்துள்ளனர். பணத்தை பெற்று வாக்களித்தால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எதுவும் செய்ய மாட்டார்கள். இனி வரும் காலங்களில் கட்சி சின்னங்களை வைத்து தேர்தல் நடைபெற கூடாது. சுயேட்சையாக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும்.

நகராட்சி, மேயர் தேர்தல் வெளிப்படையாக நடைபெற வேண்டும். மாறாக மறைமுகமாக நடைபெறுவதால் குதிரை பேரம் நடக்கும். மேலும், பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அடுத்து வரக்கூடிய தேர்தல்களிலும் பாமக தனித்து போட்டியிடும். தேர்தலுக்கு முன் திமுக கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை என மக்கள் கூறுகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறிய திமுக அதனை நிறைநிறைவேற்றவில்லை. எந்த மாநிலத்திலும் நீட் தேர்விற்கு அதிகமாக மாணவர்கள் உயிரிழக்கவில்லை தமிழகத்தில் தான் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *