• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பகல் 1 மணி நிலவரப்படி 35.34% வாக்குகள் பதிவு..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி35.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர், நாமக்கல் மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக சென்னை மாநகராட்சியில் 23.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டிலேயே சென்னையில் வாக்குப்பதிவு தொடர்ந்து மந்தமாக காணப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்த அளவாக 30.23 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.