• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

இலக்கியா தர்மா’ பெண் டி.எஸ்.பி-யா? ட்விட்டர் சர்ச்சை

நெல்லை காவல்துறையில் பெண் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக கூறப்படும் ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
‘இலக்கியா தர்மா’ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் அக்கவுண்ட் திருநெல்வேலியில் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அக்கவுண்ட் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்டவர்களின் அரசியல் ட்வீட்களுக்கு லைக் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அண்ணாமலையின் சமீபத்திய ப்ரொபைல் புகைப்படத்திற்கும் அந்த பெண் டிஎஸ்பி லைக் செய்துள்ளார். இதனை ட்விட்டர்வாசிகள் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறையின் ட்விட்டர் அக்கவுண்ட்களை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

ஒரு அரசு அதிகாரி இதுபோன்று, ஒரு கட்சிக்கும், அந்த கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக பதிவிடும் இடுகைகளுக்கு லைக் செய்வதும் தற்போது சர்ச்சையாகியுள்ளது. தற்போது இலக்கியா தர்மா என்ற அந்த அக்கவுண்ட் செயல்பாட்டில் இல்லை. எனவே அந்த அக்கவுண்ட் உண்மையிலேயே அந்த பெண் டிஎஸ்பி உடையது தானா? இல்லையென்றால் சர்ச்சையானவுடன் எதற்காக அக்கவுண்டை டெலிட் செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், இதுகுறித்து தமிழக அரசு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்