• Sun. Apr 28th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • முன்னாள் அமைச்சருடன் காவல்துறையினர் வாக்குவாதம்

முன்னாள் அமைச்சருடன் காவல்துறையினர் வாக்குவாதம்

கரூரில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.அவர்களை அதிமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பரிசுப்பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த…

21 மாநகராட்சிகளிலும் எங்கள் அணியே வெற்றி பெறும் – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

“21 மாநகராட்சிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம்” என தனது வாக்கை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர். தமிழகத்தில் உள்ள 648…

5 மணிக்கு மேல சென்றால் அனுமதி கிடையாது..

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை…

6 மணி நேரத்திற்கு பின் எஸ்.பி விடுவிப்பு…என்ன தான் பிரச்சனை ?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 9 சட்டசபை உறுப்பினர்கள் 6 மணி நேரத்திற்குப் பின்பு விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில்…

பூத் மாறி ஓட்டு போட சென்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே…

கோவையில் எஸ்.பி வேலுமணி குண்டுகட்டாக கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக காலை 10.30 மணி முதலே ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – ஆணைய விசாரணை நிறைவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தற்போது நிறைவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்…

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.பி. வேலுமணி தர்ணா

தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், சில இடங்களில் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளும்…

முன்னாள் அமைச்சர் மகன் வார்டில் இரவு முழுவதும் பறக்கும் படை ரோந்து

திண்டுக்கல் மாநகராட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் மகன் போட்டியிடும் 4-வது வார்டில் பணப் பட்டுவாடா செய்யப் படுவதாக புகார் எழுந்தது.அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பறக்கும் படையினர் ரோந்து சென்றனர். திண்டுக்கல் மாநகராட்சி 4-வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்…

மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கியது – அமைச்சர் தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவின், மறைந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்…