• Tue. Apr 23rd, 2024

வாக்களிக்க விரும்பவில்லை: அறப்போர் இயக்க ஜெயராமன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பதிவு செய்தார்

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்களிக்க விரும்பவில்லை என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பதிவு செய்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா வசதி இல்லாததைக் கண்டித்தும், அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வகையிலும் வாக்களிக்க விரும்பவில்லை என மயிலாப்பூரில் தனது வார்டுக்கு உட்பட்ட கற்பகவல்லி பள்ளி வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

நோட்டா இல்லாததிற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பவதாவது, தமிழக உள்ளாட்சி சட்டப்பரிவில் இதற்கான தனிச் சட்டம் இயற்ற வேண்டிய நிலை உள்ளது. தற்போதுள்ள நிலையில் வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று முடிவெடுத்தால், சம்பந்தப்பட்ட வாக்குசாவடியின் தேர்தல் அதிகாரியிடம் 17 – பி என்கிற விண்ணபத்தை வாங்கி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என எழுதிக்கொடுக்கலாம். அதன்படி, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *