• Sat. Apr 1st, 2023

கிஷோர்

  • Home
  • ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை – திருமணம் ஆகாதது காரணமா?

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை – திருமணம் ஆகாதது காரணமா?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாத்தூர் தூத்துக்குடி தண்டவாள ரயில் பாதையில் ஆண் சடலம் ஒன்று சிதலமடைந்து கிடைப்பதாக சாத்தூர் தாலுகா போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற சாத்தூர் தாலுகா போலீசார் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.…

தோட்ட வேலை பார்த்தவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் தோட்ட வேலை பார்த்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மகேந்திரன் (28) என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு. 3 மணி நேர தேடுதலுக்குப் பின் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.…

நீர்வரத்தை பார்வையிட்ட எம்எல்ஏ தங்கபாண்டியன்…

இராஜபாளையம் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வார காலம் மழை பொழிந்ததைத் தொடர்ந்து ஆறாவது மையில் நீர்த்தேக்க நிலையத்திற்கும் மற்றும் அய்யனார் கோவில் அருவியிலிருந்து நீர்தேக்க நிலையத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையையும் நமது மக்கள் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் அவர்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று இரவு மழை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது மழை பெய்யத் துவங்கியுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே…

சாத்தூர் அருகே அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோப்பைநாயக்கன்பட்டி, கோசுகுண்டு, வாழவந்தாள்புரம், நீராவிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,…

ஸ்ரீ.வி அருகே பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் கொடுத்த வரவேற்பு..!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுததூர் அருகே உள்ளே பள்ளியில், மாணவர்களை மேளதாளங்கள் முழங்க தலைமை ஆசிரியர் வரவேற்பு கொடுத்ததுடன், புத்தாடைகளும், இனிப்புகளும் வழங்கியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று கட்டுப்பாடுகளுடன்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் வத்திராயிருப்பு பகுதி அணைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

ஸ்ரீவில்லிபுத்தூர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வத்திராயிருப்பு பகுதி அணைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையும் துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.…

பொதுப் பாதையை ஆக்கிரமித்த தனிநபர்கள் – வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பொதுப் பாதையை ஆக்கிரமித்து தனிநபர்கள் வேலி அமைத்ததாக புகாரை அடுத்து பார்வையிட வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பாதை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தனர். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சின்னான்செட்டிபட்டி ஓடைத்தெருவில் சுமார் 30க்கும்…

கோவில்களில் தங்க நகைகளை உருக்கக்கூடாது – இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!..

தமிழக திருக்கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளை உருக்கக்கூடாது. மேலும் இந்துக் கோவில்கள் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம். மற்ற மத கோவில்களை கை வைத்து நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும், தமிழக அறநிலையத் துறையையும் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத…

கோவில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தீவிரம்!..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நில ஆக்கிரமிப்பு, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை அகற்றும்படி…