• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோவில்களில் தங்க நகைகளை உருக்கக்கூடாது – இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!..

தமிழக திருக்கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளை உருக்கக்கூடாது. மேலும் இந்துக் கோவில்கள் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம். மற்ற மத கோவில்களை கை வைத்து நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும், தமிழக அறநிலையத் துறையையும் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதி, கீழரத வீதி சந்திப்பில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தார், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் கே. கே. பொன்னையா ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் முருகன், நகர தலைவர் இளங்கோ செல்வன் மற்றும் இந்து முன்னணி, பாரதிய ஜனதா நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.