இராஜபாளையம் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வார காலம் மழை பொழிந்ததைத் தொடர்ந்து ஆறாவது மையில் நீர்த்தேக்க நிலையத்திற்கும் மற்றும் அய்யனார் கோவில் அருவியிலிருந்து நீர்தேக்க நிலையத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையையும் நமது மக்கள் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் அவர்கள் நேரில் சென்று நீர்வரத்தை பார்வையிட்டார்.
அப்போது பேசிய அவர், ஆறாவது மையில் முதலாவது நீர்த்தேக்க நிலையத்தில் மொத்த கொள்ளளவான 20 அடியில் 18 அடி நிரம்பியதாலும் இரண்டாவது நீர்த்தேக்க நிலையத்தின் மொத்த கொள்ளளவான 20 அடியில் 9 அடி நிரம்பியுள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்துள்ளதால் நீர்த்தேக்க நிலையங்களில் மொத்த கொள்ளளவும் நீரை தேக்கிவைத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீருடன் போர்தண்ணீர் கலக்காமல் முழுவதுமாக அய்யானர் கோவில் அருவித் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு வழங்குமாறு நகராட்சி ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் அருவி அருகில் உள்ள குரங்குகளுக்கு MLA அவர்கள் உணவுகளை வழங்கினார்.
அவருடன் நகராட்சி ஆணையர் சுந்தரம்பாள் பொறியாளர் ராமலிங்கம் நகரமைப்பு அலுவலர் மதியழகன் திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.