ஸ்ரீவில்லிபுத்தூர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வத்திராயிருப்பு பகுதி அணைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையும் துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுன் ஆலோசனை மேற்கொண்டார்.