• Wed. Jan 22nd, 2025

சாத்தூர் அருகே அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்…

Byகிஷோர்

Nov 1, 2021

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோப்பைநாயக்கன்பட்டி, கோசுகுண்டு, வாழவந்தாள்புரம், நீராவிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 4 இடங்களில் புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், நிர்மலா கடற்கரை ராஜ், குருசாமி, முருகேசன் உள்ளிட்ட திமுக, மதிமுக நிர்வாகிகளும் பொது மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.