• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தொடர் மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

ByK Kaliraj

May 25, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டில் டிவி வாஷிங் மெஷின் பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன. இரவு நேரங்களில் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் தொடர் மின்வெட்டை தவிர்க்க தங்கள் கிராமத்தில் மின் மாற்றி அமைக்க மின் வாரியத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இதுவரை புதிய மின்மாற்றி அமைக்காததாதை கண்டித்து கிராம மக்கள் வெம்பக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது..