தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியாகும்.
இந்நிலையில் வாடிப்பட்டி ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளர் இந்திராணி மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாற்றியுள்ளார்.மேலும் கடத்தல்காரர்களை உடனடியாக கண்டுபிடித்து அதிமுக வேட்பாளர் இந்திராணியை கண்டுபிடிக்க வேண்டும் எனக்கோரி அதிமுக முன்னாள் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.