சிவசேனா கட்சியின் கொள்கையான தேசமும்…தெய்வீகமும்… இந்துத்துவா கொள்கையை பின்பற்றும் வேட்பாளர்களை ஆதரிப்பதோடு, அவர்களுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட சிவசேனா கட்சி அலுவலத்தில், நகர் புற உள்ளாட்சி தேர்தல் குறித்த, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேனி மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலைச்செல்வம், பொதுச் செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தனர். சிவசேனா கட்சியின் தேசிய தலைமை அறிவுறுத்தலின்படி, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா கட்சி சார்பாக வேட்பாளர்களை களமிறக்க முடியவில்லை. மேலும் தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசம் கொடுக்காததால், கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவம் கிடைப்பதில் தேர்தல் விதிமுறையின் படி சிக்கல் ஏற்பட்டது. எனவே, தேசிய தலைமை அறிவுறுத்தலின் படியும், தமிழகத்தின் மாநில பொறுப்பாளர்கள் அறிவுறுத்தலின் படியும், சிவசேனா கட்சி போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா கட்சியின் கொள்கையான தேசமும்… தெய்வீகமும்… இந்துத்துவா கொள்கையை பின்பற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து ஓட்டு போடவும் முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட இணை அமைப்பாளர் நாட்ராயன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ஜவகர், வீரையா, மாவட்ட மகளிரணி தலைவி கோகிலா நாகேஸ்வரி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய , பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.