• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலின்-யை கண்டித்து தவெக எம்எல்ஏ விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Aug 4, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தவெக மகளீரணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

கருப்பு உடை அணிந்தும், உதயநிதி ஸ்டாலின் க்கு எதிரான பாதாதைகளை ஏந்தி, கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியத்துக்குட்பட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்று கண்டனத்தை வெளிப்படுத்தினர்.