• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உதயநிதியை கண்டித்து தமிழக வெற்றி கழக மகளிர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே தமிழகம் முதல்வரையும் பெண்களையும் ஆபாசமாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தனஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் யமுனா மாவட்ட மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் பாண்டீஸ்வரி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி மகளிர் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நகர கிராம நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்ட ஏற்பாட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி கிழக்கு நகர செயலாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.