• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை என்று போக்குவரத்துத்துறை உத்தரவு. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். பணியின் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடத்துநர்கள், பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்கவும் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தடையை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.