ஜெகதளா பேரூராட்சியில் இன்று நடைப்பெற்ற மாதாந்திர கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்காத ஊழியர்கள் மறுப்பு.
குன்னூர் தாலுக்காவிற்குட்ப்பட்ட ஜெகதளா பேருராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள மக்களின் பிரச்சனைகளை விவாதிக்க மாதந்திர கூட்டம் நடைப்பெறுவது வழக்கம்.இம்மாத மாதந்திர கூட்டம் இன்று ஜெகதளா பேரூராட்சி கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் பங்கஜம் தலைமையில், செயல் அலுவலர் சதாசிவம் முன்னிலையில் நடைப்பெற்றது.இந்நிலையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் பேரூராட்சி ஊழியர் தடுத்து நிறுத்தி வெளியில் காக்க வைத்தது ஜனநாயகத்தின் 4வது தூண்னான பத்திரிக்கை துறையை இழிவு படுத்தும் வகையில் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் நடந்து கொள்வது கண்டனத்துக்குறியது.
எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்தியாளர்க்கு உரிய அனுமதி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.