குமரி மக்களின் வாழ்வாதரத்தோடு போட்டி இட்டு கமிஷனில் கவனம் செலுத்தும் தி மு க, அதிமுக., நாம் தமிழர் கட்சியின் குற்றச்சாட்டு…
திமுக,அதிமுக இரண்டு கட்சியும் நாசக்கார திட்டத்திற்கு மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களை திசை திருப்பி அவர்களின் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், இவர்களுக்கு தேவை எல்லாமே கமிஷன் தான், அவர்களுக்கு இயற்கையும், இயற்கை வளங்களை காப்பாற்றுவது பற்றி எந்த எண்ணமும் கிடையாது.…
கோவை கொடிசியா மைதானம் அருகே காவல்துறையால் சுடப்பட்ட, குமரியை சேர்ந்த ரவுடி ஆல்வின் மீது, குமரி காவல்துறையில் 8 வழக்குகள்…
கோவை கொடிசியா மைதானம் அருகே குமரி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஆல்வினை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். ஆல்வின் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் ஓட்டல் அதிபர் வினோத்குமார் கொலை வழக்கு மற்றும் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த ஜெயசிங் கொலை வழக்குகள் உள்ளது.…
சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் – குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
உசிலம்பட்டி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுக்கூட்டத்தில் பணப்பட்டுவாடாவின் போது, புலம்பிச் சென்ற மூதாட்டி…
200 ரூபாய் கொடுக்கிறேன் சொல்லிட்டு 100 ரூபாய் கொடுத்து இருக்காங்கப்பா….. அந்தப் பக்கம் 200 ரூபாய் கொடுக்குறாங்க, நாங்க சொந்தக்காரங்கனால நூறு ரூபாய் கொடுத்து இருக்காங்கப்பா…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுக்கூட்டத்தில் பணப்பட்டுவாடாவின் போது மூதாட்டி ஒருவர் புலம்பிச் சென்றார்.…
மதுரை அரசு மருத்துவமனை பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர் தவறி விழுந்து படுகாயம்-காவல்துறை விசாரணை
மதுரை அரசு மருத்துவமனை பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் உடைந்து ஜன்னல்களை மாற்றுவது, பழுதடைந்துள்ள சுவர்களுக்கு சிமெண்ட் பூசும் பணிகளும் நடைபெற்று…
பிரதமர் மோடிக்கு ராமசாமி கோவிலில் அர்ச்சனை செய்த தமிழிசை சௌந்தர்ராஜன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் பகுதியில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த ராமசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வார். இந்நிலையில் 5 வாரங்கள் இப்பகுதியே திருவிழா கோலமாக…
இளையான்குடி பிஸ்மில்லா நகரில் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டிய குழியில் விஷவாயு தாக்கி இருவர் பலி
25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்த பொழுது விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சென்று மேற்படி இருவரையும் மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிர் இழந்துள்ளார். இவர்களது…
மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில் 19 வது சுயம்வரம் நிகழ்ச்சி
மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில் 19 வது சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.பீஸ் நிக்காஹ் திருமண தகவல் மையத்தின் நிறுவனரும், சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞருமான முகமது பாரூக் அவர்களின் தலைமையில் கே. புதூர் வட்டார உலாமா பைரோஸ்கான் முன்னிலையில் நடைபெற்ற…
தொல்லியல் ஆய்வுகளில் தமிழுக்கு முந்தைய நாகரிகம் இருந்துள்ளது – அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர்
வட இந்திய பகுதிகளில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் தமிழுக்கு முந்தைய நாகரிகம் இருந்துள்ளது எழுத்து மற்றும் வடிவங்கள் இல்லாததால் அவை தமிழோடு தொடர்புடைய முந்தைய நாகரிகமாக கருதப்படுகிறது என அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மதுரை மன்னர்…
அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக நான் கருத்து சொல்ல முடியாது… எம்.பி மாணிக்க தாகூர் பளிச் பேட்டி !
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒரு நேர்மையான விசாரணை தேவை, மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அரசியலை தவிர்ப்பது நன்றாக இருக்கும் என சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார். தமிழகத்தில் தனிக் கட்சியாக எந்த ஒரு கட்சியும் வெற்றி பெற…




