• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அருகே தோல் பொருள்கள் விழிப்புணர்வு முகாம்…,

மதுரை மண்டல கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பாக கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முகாமினை மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார்.
மண்புழு உர உற்பத்தியாளர்கள் பழனிச்சாமி, சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாக அதிகாரி மணவாளன் வரவேற்றார்.

இந்த முகாமில் உதவி இயக்குனர் செந்தில்குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார்ஆகியோர் பேசினார். இதில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் செயல்படுத்தி வருகின்ற திட்டங்கள் குறித்தும், காதி கிராமோத்தியோக் விகாஸ் பயிற்சி திட்டங்கள் குறித்தும் …

இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது திறன்களைப் பயன்படுத்தி சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், தோல் பொருட்கள் பயிற்சி குறித்த விபரங்கள், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கிடைக்கும் பயிற்சிகள், கடன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் தொழில் ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பயனாளி களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. .