31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் ஆர்ப்பாட்டம்
தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தப் போராட்ட விளக்க…
வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது என்பது அவர்கள் விருப்பம், ஆட்சியரகப் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களின் விருப்பம் என பேட்டியளித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இன்றைய ஆர்ப்பாட்டம் தோழர் விவசாய சங்க மாவட்ட செயலாளர் தோழர் கே.காமராஜ் தலைமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் என்.சாத்தையா, விவசாய…
விநாயகர் சதுர்த்தி.!!
இன்று (07-09-2024) சிவகங்கை நகர் இந்திரா நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நமது நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அன்னதான நிகழ்ச்சியை…
ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி ஆசிரியர் தினவிழா கொண்டாடிய மாணவர்கள்
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர்களே தங்களின் இரண்டாவது பெற்றோராகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் ஆசிரியர்களுக்கு உற்சாகத்துடன் விழா எடுத்தனர். இந்த விழாவில் மாணவர் தலைவர் காவியன் மற்றும் மாணவத் தலைவி தான்யா ஶ்ரீ மற்றும் இதர…
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சாம்பவிகா பள்ளியின் தாளாளருக்கு, மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை..,
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சாம்பவிகா பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தலைசிறந்த தத்துவஞானியும், இந்தியாவின் முதல் குடியரசு தலைவருமான, ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 05ம்…
விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம்! பிள்ளையாரை தரிசனம் செய்து தேங்காய் உடைத்து திரையரங்குக்கு சென்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள்!
சிவகங்கை யாழினி சினிமாஸில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 09 மணிக்கு துவங்கியது. ஏராளமான ரசிகர்கள் படத்தை காண்பதற்காக திரையரங்கம் முன்பு குவிந்திருந்தனர். மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். விஜய்…
குத்துச்சண்டை போட்டியில் 11 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்று சிவகங்கை மாவட்ட வீரர்கள் சாதனை…
குத்துச்சண்டை போட்டியில் 11 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்று சிவகங்கை மாவட்ட வீரர்கள் சாதனை. சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம் துரைஆனந்த் வாழ்த்து தெரிவித்தார். சேலம் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற சேலம்…
சிவகங்கையில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்…
சிவகங்கை மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில்மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் தீமைகள்குறித்தும் மது நாட்டிற்கும், வீட்டுக்கும் கேடுவிளைவிக்கும் என்பதை விளக்கியும், கள்ளச்சாராயம் அருந்தினால்…
கவிஞர் மீரா-க்கு அடையாளப் பெயர், நினைவு மண்டபம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது – தமிழாசிரியர் இளங்கோவன் வேண்டுகோள்…
சிவகங்கையில் கவிஞர் மீரா-க்கு அடையாளப் பெயர், நினைவு மண்டபம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது என தமிழாசிரியர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தார். திராவிடக் கொள்கையிலும், பொதுவுடைமை கொள்கையிலும் தன் வாழ்நாள் இறுதி வரை பயணம் செய்தவர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு…