• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை கொடிசியா மைதானம் அருகே காவல்துறையால் சுடப்பட்ட, குமரியை சேர்ந்த ரவுடி ஆல்வின் மீது, குமரி காவல்துறையில் 8 வழக்குகள்…

கோவை கொடிசியா மைதானம் அருகே குமரி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஆல்வினை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். ஆல்வின் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் ஓட்டல் அதிபர் வினோத்குமார் கொலை வழக்கு மற்றும் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த ஜெயசிங் கொலை வழக்குகள் உள்ளது. வடசேரி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் ஆல்வின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது தவிர சுசீந்திரம், வடசேரி, தென்தாமரைகுளம் போலீஸ் நிலையங்களிலும் ஆல்வின் மீது வழக்குகள் உள்ளது. குமரி மாவட்டத்தில் 8 வழக்குகள் ஆல்வின் மீது உள்ளது. இந்த நிலையில் 2023-ம் ஆண்டு கோவையில் நடந்த கொலை வழக்கில் ஆல்வினை போலீசார் கைது செய்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆல்வின் ஜாமீனில் வந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்தார்.போலீசார் அவரை பிடிக்க சென்றபோது அவர்களை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றதால் போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.