தேவையான பொருட்கள்:
குடை மிளகாய்-1, பன்னீர்- 200 கிராம், பட்டாணி- 50 கிராம், வெங்காயம்- 2
தக்காளி-1, மஞ்சள் தூள்-1ஃ4 தேக்கரண்டி, மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
சப்ஜி தூள்- 1 தேக்கரண்டி, எண்ணெய்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு, கஸ்தூரி மேத்தி- 1 தேக்கரண்டி
பட்டை- 1, கிராம்பு- 2, ஏலக்காய்- 1, பிரியாணி இலை- 1
செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கிய பிறகு, குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், தக்காளி சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் வேகவைத்த பட்டாணியைச் சேர்க்கவும். அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள், சப்ஜிதூள் சேர்த்துப் பின்னர் நறுக்கியப் பன்னீரைச் சேர்த்துக் கிளறவும். பன்னீர் மாசாலாவோடு நன்கு கலந்த பிறகு கஸ்தூரிமேத்தி தூவி இறக்கினால் சுவையான குடைமிளகாய் பன்னீர் தயார்.