

தமிழக முதல்வர் வழியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்பற்றுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ர க் ஷாபந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெண்களுக்கு 48 மணி நேர இலவச பேருந்து பயணத்தை உத்தரப்பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதுமே உள்ளூர் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத்திட்டத்தில் கையெழுத்திட்டார். தற்போது அதே வழியை யோகியும் பின்பற்றுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
