• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உங்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்வேன் சக்கரபாணி பேச்சு..,

ByS.Ariyanayagam

Apr 21, 2026

ஒட்டன்சத்திரம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
ஒட்டன்சத்திரம் தொகுதியில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக 30 ஆண்டுகள் இருந்து விட்டேன். இனி வரும் நாட்களிலும் உங்களுடனே தங்கி நான் சேவை செய்வேன். எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள்.

முதல்வரின் கரத்தை வலுப்படுத்த, நாட்டில் பிரிவினை மறைந்து ஒற்றுமை வளர சிறுபான்மை சமுதாய மக்கள் நலமுடன் வாழ முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

பெண்கள் கல்வி பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக எந்நாளும் திட்டங்களை முதல்வர் தீட்டி வருகிறார். இதில் மகளின் உரிமை தொகை, மகளிர் காண கல்வி உட்பட பலத்திட்டங்கள் அடங்கும். பச்சைக் குழந்தைகள் முதல் பாட்டி வரை பயன்பெறும் திட்டங்களை திமுக அரசு அளித்துள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அனைத்து வளர்ச்சியும் பெறும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

ஒட்டன்சத்திரம் ஹைடெக் சிட்டியாக மாற்ற எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். உங்களில் ஒருவனாக சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக நான் எப்போதும் இருப்பேன், இவ்வாறு அவர் பேசினார். அவருடன் தொகுதி பொறுப்பாளர் திருச்சி சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.