• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பத்மகிரி பாபா ஜீவசமாதியில் சித்திரை பௌர்ணமி விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் சுக்காம்பட்டி கருமலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி கோரக்கநாதர் மௌனகுரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா ஜீவசமாதி உள்ளது.

இங்கு சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு லட்சார்ச்சனையுடன் யாக பூஜை நடைபெற்றது. இதனை அடுத்து ஜீவசமாதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது

வேடசந்தூர் ஆத்துமேட்டில் இருந்து கருமலைக்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டது.

விழாவில் திண்டுக்கல், சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
ஆதி கோரக்கநாதர் மௌனகுரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா ஜீவசமாதியை வணங்கினார்கள்.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவின் ஏற்பாடுகளை கருமலை சமஸ்தானம் நிர்வாகி என் .எஸ்.கே. சரவணக்குமார் மற்றும் நிர்வாகஸ்தர்கள் செய்து இருந்தார்கள்.