• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வாலிபர் ஒருவர் சலவையக அறையின் பூட்டை உடைக்க முயன்ற சம்பவம்..,

BySeenu

May 2, 2026

கோவை அரசு மருத்துவமனை (CMCH) வளாகத்தில் இன்று வடமாநில வாலிபர் ஒருவர் சலவையக அறையின் பூட்டை கல்லால் அடித்து உடைக்க முயன்ற சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் கிளப்பி உள்ளது.

நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், எதற்கும் அஞ்சாமல் இந்த வாலிபர் நிகழ்த்திய துணிகரச் செயல் அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சலவையக (Laundry Room) அறைக்குச் சென்ற அந்த வடமாநில இளைஞர், கையில் வைத்து இருந்த பெரிய கல்லை எடுத்து பூட்டை ஓங்கி அடித்து உடைக்க முயன்று உள்ளார். இதைப் பார்த்த அங்கு இருந்த பொதுமக்கள் “ஏன் பூட்டை உடைக்கிறாய் ?” என ‘கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத அந்த வாலிபர், மீண்டும், மீண்டும் பூட்டை உடைப்பதிலேயே தீவிரமாக இருந்து உள்ளார்.

​இவரது இந்தச் செயலால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், உடனடியாக மருத்துவமனை காவலாளிக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவலாளி அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வடமாநில வாலிபரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.