

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் வீடியோ வெளியிடக்கூடாது என சிபிசிஐடி அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது யூடியூபர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதனால் புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் எந்த வித பதிவையும் வீடியோக்களையும் வெளியிடவேண்டாம் என்றும் ,அனைவரும் சிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
