தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பண்ருட்டியைச் சேர்ந்த கலாவதி, சென்னையைச் சேர்ந்த மல்லிகா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கிய மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றாலத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.