• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

ByS.Ariyanayagam

Apr 29, 2026

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நடந்தது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பத்மகிரீஸ்வரர் – அபிராமி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாமி, அம்பாளின் பிரதிநிதியான பட்டர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். மாங்கல்ய பூஜையைக்கு பின், பட்டர்கள் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் அபிராமி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தனர். பிரியாவிடைக்கும் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.