ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது இரண்டுபிரிவுகளில் வழக்கு பதிவுசெய்ய உத்தரவு
தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது 417, 420 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
இர்பான ரஸ்வீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளில் சேர்க்க கோரி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம்,”மனுதாரரின் கணவர் ஆண்மையற்றவராக இருந்ததை மறைத்து திருமணம் செய்து 200 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக பெற்றுள்ளனர்.திருமணத்திற்கு பின்பு தெரியவந்த நிலையில் கணவர் தலாக் முறையில் விவாகரத்து கூறிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். மனுதாரரின் கணவர் மீது தவறு இருக்கும் சூழலில் அதை மறைத்து திருமணம் செய்துள்ளார்.ஆகவே, மனுதாரர் மீது 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.