• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சாதி ரீதியாக அடித்து திட்டியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு..,

ByKalamegam Viswanathan

Apr 30, 2026

கருப்பச்சாமி, விக்கி, லெட்சுமணன், மதுரைவீரன் சிலைமான் காவல்துறையினர் நான்கு நபர்களை கைது செய்து உள்ளனர்.

5 வது குற்றவாளியான துரைசிங்கத்தை தேடி வருகின்றனர்.

தமிழர் எழுச்சிக் கழகம் நிராவாகி பிரகாஷ் ராஜ் என்பவரை சாதி ரீதியாக திட்டி உடைகல்லால் மண்டையை உடைத்துள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை (29.04.2026) சக்கிமங்கலம் அருகே உள்ள உடன்குண்டு கிராமத்தில், சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்திடக் கோரி கிராம மக்கள் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.